பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

 

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

பொதுவாக பீகார் சட்டப்பேரவையின் மழைகாலக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக கூட்டத்தொடர் 1 நாளாக குறைக்கப்பட்டது. மேலும் பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அம்மாநில சட்டப்பேரவை கட்டிடத்தில் நடைபெறவில்லை. சட்டப்பேரவையிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கயான் பவனில் கூட்டத்தொடர் நடைபெற்றது. சட்டப்பேரவை கட்டிடத்தில் 242 எம்.எல்.ஏ.க்களை சமூக விலகல் நெறிமுறைகளுக்கு இணங்க அமர வைக்க முடியாது என்பதால் கயான் பவனில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

1937ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பீகார் சட்டப்பேரவை கட்டிடத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவில்லை. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை மழைக்கால அமர்வில், கோவிட்-19 மற்றும் வெள்ளம் தொடர்பாக பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம் சுருக்கமாக விவாதம் நடைபெற்றது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று நடைபெற்ற ஒருநாள் மழைக்கால கூட்டத்தொடரில் சுமார் 12 மசோதாக்களை நிறைவேற்றியது. மேலும் துணை பட்ஜெட்டையும் நிறைவேற்றியது.

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஆகையால் இந்த கூட்டத்தொடர்தான் இந்த ஆட்சியின் காலத்தின் கடைசி கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தொடரில் பங்கேற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாஸ்க் அணிந்து இருந்தனர். மேலும் கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்துக்கு நுழைவதற்கு முன் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.