Home ஆன்மிகம் ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?

ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?

கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! கந்த பெருமான் நம் சொந்த பெருமான். கருணைக் கடவுளாம் கந்தனின் பெருமைகளையும், புகழையும் சொல்லி முடிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. நாமெல்லாம் நோய் நொடியின்றி இன்புற்று வாழ வகை செய்யும் கந்த சஷ்டி கவசத்தின் நாயகனான முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆறுமுகப்பெருமானுக்கு
சொல்லும் அரோகராவின் அர்த்தம் மற்றும் ஏன் சொல்லப்படுகிறது என்பதை பார்க்கலாம்..

ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?
ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?

உலகெங்கிலும் உள்ள தமிழ் கடவுளான முருகன் கோயிலில் ஆறுமுகப் பெருமானை வணங்கும்போது, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு வணங்கப்படுவது வழக்கம் ஆகும். முருகனுக்கு அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் சுறுக்கம். ‘ரோகம்’என்றால் நோய், ‘அரோகம்’
என்றால் நோயில்லாமல், ‘அரன்’ என்றால் காப்பவன், ‘ஹர’ என்றால் நீக்குபவன், இதற்கான பொருள், கடவுளே, ‘நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக’என்பதாகும். அர ஹரோ ஹரா என்றும் அரோஹரா என்றும் சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்கள்.

ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?

திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு
வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச்சொல்வதை விட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ‘அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன்
பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்றுச்சொல்வது வழக்கமாயிற்று.

ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?

இன்னும் சொல்லப்போனால் அரோகரா என்பதை, அர+ஓ+ஹரா என பிரிக்கலாம். அதாவது, அரண் ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை
குறிப்பதாகும். இருந்தாலும் அவர் மகனின் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணங்க்கும்போது அரோகரா என்கின்றனர். காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், (முருகனடியார்கள்) ‘கௌமாரர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச்
சொல்லி வந்ததால் இச்சொற்கள் ஆறுமுகனோடு இணைந்துவிட்டன.

பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்வது ‘வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களைப் போக்கி அருள்வாயாக என்று உரிமையோடு முறையிடுவதாகும். முருகனுக்கு அரோகரா!

-வித்யா ராஜா

ஆறுமுகனுக்கு அரோகரா சொல்வது ஏன்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

திருப்பூர் திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை விரைவில் தொடங்க உள்ளது. திருப்பூர்...

சூறைக்காற்றுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு… தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த...

ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

நாம் அனைவரும் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏராளமான நிறுவனங்கள் நமக்கு சேவைகளை அளித்தாலும் உலகம் முழுவதும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகின்றன. கூகுள், அமேசான்,...

மக்கள் நீதி மய்யத்திலிருந்து பத்மபிரியா விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்...
- Advertisment -
TopTamilNews