Home இந்தியா கிழக்கு லடாக் பகுதியில் சத்தமில்லாமல் பாலத்தை கட்டி முடித்த இந்தியா... ராணுவம் தகவல்

கிழக்கு லடாக் பகுதியில் சத்தமில்லாமல் பாலத்தை கட்டி முடித்த இந்தியா… ராணுவம் தகவல்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களின் முயற்சிகளை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். அப்போது இரு தரப்பினரும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

கிழக்கு லடாக்

இந்த சூழ்நிலையில் ராணுவத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் வகையில், கிழக்கு லடாக்கின் ஷியோக் நதியின் குறுக்கே நம் நாடு பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. ஷியோக்-கல்வான் நதிகள் சந்திக்கும் இடத்துக்கு அருகே இது உள்ளது. இந்நிலையில் அந்த பாலம் கட்டுமான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள்
மேலும், பாட்ரோல் பாயின்ட் 14க்கு செல்லும் பாதையில் அந்த பாலம் இல்லை எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பாட்ரோல் பாயிண்ட் 14 அருகேதான் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்தது. கல்வான் பள்ளதாக்கு சம்பவம் தொடர்பாக சீனாவுடன் எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஷியோக் நதியின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் முடிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews