சிதலமடைந்த நிழற்குடையை சீரமைத்த ராணுவ வீரர்கள்- பொதுமக்கள் பாராட்டு

 

சிதலமடைந்த நிழற்குடையை சீரமைத்த ராணுவ வீரர்கள்- பொதுமக்கள் பாராட்டு

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சிதலமடைந்த பயணிகள் நிற்குடையை புதுப்பித்து, கழிப்பறை வசதியுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ராணுவ வீரர்களின் செயல் அனைவரது பாராட்டுதலை பெற்றுள்ளது., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ராணுவத்தில் பணி புரியும் 50-க்கும் வீரர்கள், ஜவான்ஸ் காக்கும் கரங்கள் என்ற அமைப்பினை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரானா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இந்த அமைப்பின் சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கியும் வந்தனர். மேலும், சின்ன வரிகம் பகுதியில் சிதலமடைந்த நிழற் குடையையும் சீரமைத்து கொடுத்தனர்.

சிதலமடைந்த நிழற்குடையை சீரமைத்த ராணுவ வீரர்கள்- பொதுமக்கள் பாராட்டு

இந்த நிலையில், தேவலாபுரம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்கு குடையை, தற்போது விடுமுறையில் வந்துள்ள ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து புதுப்பித்து உள்ளனர். மேலும், பெண் பயணிகளின் வசதிக்காக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தினர்.பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று நிழற்குடை மற்றும் கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ராணுவ வீரர்களின் இந்த உதவியால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.