Home தமிழகம் ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - முதல்வர்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சேலத்தைச் சேர்ந்த மதியழகன், குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த மதியழகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் சேலம்மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளை எதிர்த்து நின்று தாய்நாடு காக்கும் மகத்தான பணியில் இன்னுயிர் ஈந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்-தியாகத் தமிழர் மதியழகனுக்கு வீரவணக்கம்” என பதிவிட்டுள்ளார்.

வீரமரணமடைந்த மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, ரூ20 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.- முதல்வர் எடப்பாடி

மாவட்ட செய்திகள்

Most Popular

பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரும் வழக்கில் இன்று...

65 ஆண்டுகள் குளிக்காமல் வாழும் மனிதர்! உலகின் நெம்.1 அழுக்கு மனிதர்

ஒரு நாள் குளிக்காமல் விட்டாலே ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கும், இன்னும் காலையில் ஒரு வேளை குளித்துவிட்டு இரவில் குளிக்காமல் படுத்தால் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கும்...

சின்ன தல பேக் டூ சிஎஸ்கே… தமிழ் புலவர் ரிலீஸ் – யார் In, யார் Out

சிஎஸ்கே அணி ரெய்னாவை தக்கவைத்துள்ளது. ஹர்பஜனோடு சேர்த்து மேலும் மூன்று சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் அரபு நாடுகளில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன்...

8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. சென்ற பாராளுமன்ற தேர்தலில் 7 இடங்கள் அதிமுக இடம் பெற்றது. அதில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி...
Do NOT follow this link or you will be banned from the site!