எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்ததை

எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்ததை

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவு செய்தன. இதனையடுத்து சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மோல்டாவில் கடந்த 6ம் தேதியன்று 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு, சீன தரப்பு ராணுவ குழுவை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சூழ்நிலையில் கடந்த 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும உயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்ததை

இருப்பினும் கடந்த 22ம் தேதியன்று மீண்டும் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு மால்டாவில் சீன ராணுவ தரப்பை சந்தித்து பேசியது. சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்தன. ஆனால் சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வருகிறது. பதிலுக்கு இந்தியாவும் துருப்புகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்ததை

இந்த சூழ்நிலையில் இன்று இந்திய பகுதியான சுஷுலில் இந்திய-சீன ராணுவம் இடையே 3வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இரு தரப்பின் ராணுவ கார்ப்ஸ் கமாண்டர் அல்லது லெப்டினென்ட் ஜெனரல் அளவிலான அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது