வெள்ளித்திரையில் ஓர் ரசிகர், லட்சியத்திற்கு ஓர் கருவி! ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ஜூன மூர்த்தி

 

வெள்ளித்திரையில் ஓர் ரசிகர், லட்சியத்திற்கு ஓர் கருவி! ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ஜூன மூர்த்தி

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். அத்துடன் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தற்போது துரிதப்படுத்தியுள்ளார்.

வெள்ளித்திரையில் ஓர் ரசிகர், லட்சியத்திற்கு ஓர் கருவி! ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ஜூன மூர்த்தி

பெங்களூரில் 1950 ஆம் ஆண்டு பிறந்த ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, தற்போது ஆன்மீக அரசியலையும் முன்னெடுக்கப்போகிறார். இவர் தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் ரஜினியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் ரஜினி கட்சி அறிவிப்புக்குப் பின்னர் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து, ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணுவ வீரனில் துவங்கிய என் பயணத்திலிருந்து உங்கள் வெள்ளித்திரை ரசிகராகவும், இப்போது மாற்று தமிழகத்திற்கான உங்கள் லட்சியத்திற்கு ஒரு சிறிய கருவியாகவும், உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க உள்ள ரசிகமக்களுடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.