அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அர்ஜுனமூர்த்தியின் தேர்தல் அறிக்கை!

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அர்ஜுனமூர்த்தியின் தேர்தல் அறிக்கை!

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகக் கூறி, நிர்வாகிகளாக அர்ஜுன மூர்த்தியையும் தமிழருவி மணியனையும் நியமித்தார். வழக்கம்போலவே அவர் அந்தர் பல்டி அடித்து அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ரஜினிக்காக பாஜகவில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த அர்ஜுன மூர்த்திக்கு ஏமாற்றம் அளித்துவிட்டது.

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அர்ஜுனமூர்த்தியின் தேர்தல் அறிக்கை!

அவர் திரும்பவும் பாஜகவில் சேராமல் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தோற்றுவித்தார். ஊழலை ஒழிப்பதே பிரதானக் கொள்கை என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு ரோபோ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இச்சூழலில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் அர்ஜுனமூர்த்தி வெளியிட்டார்.

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அர்ஜுனமூர்த்தியின் தேர்தல் அறிக்கை!

திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன் அர்ஜுன மூர்த்தி வெளியிட்டிருக்கிறார். முன்னதாக பாமக வெளியிட்டிருந்தது. அதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள்.

*குடும்பஅட்டைதாரர்களுக்கு தினமும் 1/2 லிட்டர் முதல் 1 லிட்டர் வரை இலவச பால் வழங்கப்படும்.

*10ஆம் வகுப்பு வரை விவசாயப் பாடம் கட்டாயம்.

*கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டையுடன் பெட்ரோல் அட்டை வழங்கப்படும். இந்த அட்டையைப் பயன்படுத்தி, மாநில அரசின் விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

*வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி, இரவு நேர பேருந்து பயணத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் அர்ஜுனமூர்த்தியின் தேர்தல் அறிக்கை!

*60 வயதை கடந்து பொது வாழ்வில் இருப்பவர்களைக் கௌரவிக்க நல்லோர் குடியிருப்பில் வீடு வழங்கப்படும்.

*தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் விவசாயம் என்ற ஸ்மார்ட் விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.