வேண்டா விருப்பமாக சச்சின் மகனை ஏலத்தில் எடுத்து கைமாறு செய்த மும்பை இந்தியன்ஸ்!

 

வேண்டா விருப்பமாக சச்சின் மகனை ஏலத்தில் எடுத்து கைமாறு செய்த மும்பை இந்தியன்ஸ்!

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. முதல்முறையாக ஏலம் சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. சச்சின் மகன் அர்ஜுன், கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்த ஸ்ரீசாந்த், சென்னை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய் உள்ளிட்ட 1114 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்திருந்தனர். 292 பேர் கொண்ட பட்டியலில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வேண்டா விருப்பமாக சச்சின் மகனை ஏலத்தில் எடுத்து கைமாறு செய்த மும்பை இந்தியன்ஸ்!

இந்நிலையில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியனை ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுத்த‌து பெங்களூரு அணி.இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டாம் குர்ரனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி.நியூசிலாந்து பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியது. ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி. சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இவர் இடது கை வேகபந்து ஆல்ரவுண்டர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அர்ஜூன், முதன் முதலில் களமிறங்கிறார். ஏலத்தில் கடைசி ஆளாக விடப்பட்ட அர்ஜூனை, சச்சினுக்காக வேறு வழியின்றி மும்பை அணி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை அணி கேப்டனாக இருந்த சச்சின், அந்த அணிக்காக விளையாடினார். ஆகவே அவரை கெளரவிக்கும் விதமாக அவரது மகனை ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.