‘வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய முயற்சி’ – அர்ஜூன் சம்பத் பரபரப்பு அறிக்கை!

 

‘வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய முயற்சி’ – அர்ஜூன் சம்பத் பரபரப்பு அறிக்கை!

தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவரான வேலூர் இப்ராஹிமையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய முயற்சி’ – அர்ஜூன் சம்பத் பரபரப்பு அறிக்கை!

அண்மையில் வேலூர் இப்ராஹிமுக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக இப்ராஹிம் தரப்பில் புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், இன்று கொடைக்கானலில் இப்ராஹிம் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட போது, நாம் தமிழர் கட்சியினரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்களும் வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து இப்ராஹிம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுக்க முயன்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த வேலூர் இப்ராஹிமுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

‘வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய முயற்சி’ – அர்ஜூன் சம்பத் பரபரப்பு அறிக்கை!

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அர்ஜூன் சம்பத், காவல்துறையின் அலட்சியப் போக்கால் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாமல் மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு ஜமாத்தார்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழக முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அர்ஜூம் சம்பத், வேலூர் இப்ராஹிம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.