“மத்தியில் மோடியின் ஆன்மீக அரசியல், மாநிலத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியல்”

 

“மத்தியில் மோடியின் ஆன்மீக அரசியல், மாநிலத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியல்”

முப்பது ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத், “அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதே ஆன்மீக அரசியல், மத்தியல் மோடிக்கும், மாநிலத்தில் ரஜினிக்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கும். ரஜினி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவார் அவருக்கு ஆதரவாக அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்வோம்.

“மத்தியில் மோடியின் ஆன்மீக அரசியல், மாநிலத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியல்”

விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பது வருத்தமளிக்கிறது, அதிமுக ஆன்மீக அரசியல் செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது ஒருவகையில் ஏற்படையதே” எனக் கூறினார்.