234 தொகுதிகளிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெல்லும்: அர்ஜூன் சம்பத்

 

234 தொகுதிகளிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெல்லும்: அர்ஜூன் சம்பத்

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

234 தொகுதிகளிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெல்லும்: அர்ஜூன் சம்பத்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “திருமாவளவன் பெண்களைப் பற்றி இழிவாக பேசியதை மு .க ஸ்டாலின் கண்டிக்காதது மிகப்பெரிய கண்டனத்துக்குரியதாகும். திருமாவளவனை காப்பாற்றுவது மு.க.ஸ்டாலின் தான். கந்தசஷ்டி விவகாரத்தில் கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்து அவர்களைக் காப்பாற்றியதும் மு .க ஸ்டாலின் தான்.

2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் களமிறங்குவேன் என்று கூறியிருந்தார். கண்டிப்பாக அவர் வருவார். 234 தொகுதிகளிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெல்லும். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தேவர் குருபூஜைக்கு வருவதற்கு அருகதையற்றவர்கள்” என தெரிவித்தார்.