மக்கள் மத்தியில் ஆன்மீக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது; ரஜினியே வருங்கால முதல்வர்- அர்ஜுன் சம்பத்

 

மக்கள் மத்தியில் ஆன்மீக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது; ரஜினியே வருங்கால முதல்வர்- அர்ஜுன் சம்பத்

குன்றத்தூர் அடுத்த கோவூரில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான இந்த கோவிலுக்கு சொந்தமான மாந்தோப்பு சாலையில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் நாகாத்தம்மன் மற்றும் சித்த நாதர் கோயில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நந்தவனத்தின் தடுப்பு பகுதிகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து எறிந்து விட்டனர். இதனை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் சென்று பார்வையிட்டார்.

மக்கள் மத்தியில் ஆன்மீக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது; ரஜினியே வருங்கால முதல்வர்- அர்ஜுன் சம்பத்

தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன்சம்பத், “பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது என்பது எங்களுக்கு ஏற்புடையது அல்ல அதை கண்டிக்கிறோம், பொது இடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களில் ஈ.வே.ரா. சிலைகள் வைப்பது எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை. பெரியார் சிலை மீது காவிப் பூசுவது காவியை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. பாஜக ஒரு ஜனநாயக கட்சி. எச்.ராஜா இரண்டு முறை தேசிய செயலாளராக இருந்துள்ளார். எச்.ராஜா அற்புதமான இந்து தமிழர்களின் தலைவர். அவருக்கு உரிய மரியாதை கட்சியில் இருக்கும், தமிழகத்திற்கான பிரதி நிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும்.

இடைத்தரகர் மூலமாக கட்சி நிதி திரட்ட கூடியவர்கள் திமுகவினர். அரிசி கடத்தலில் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் திமுகவினர். அதனால் தான் திமுக அதன் கூட்டணி கட்சியினர் வேளாண் மசோதாவை எதிர்க்கிறார்கள். பொய் பிரச்சாரம் எடுபடாது. ரஜினிகாந்த் தேர்தல் பணியை தொடங்கி விட்டார். ரஜினி மக்கள் மன்றம் சிறப்பாக பணியாற்றுகிறது. திராவிட கட்சிகள் போல் அனைவரையும் ஒன்றினைவோம் வா என கொரோனா பரப்பக்கூடாது. வாக்குச்சாவடி வரை பணிகள் நடந்து வருகிறது மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். மக்கள் மத்தியில் ஆன்மீக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது. ரஜினிகாந்த் வருங்கால முதல்வர்” என தெரிவித்தார்.