முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டும் அர்ஜூன் சம்பத்!

 

முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டும் அர்ஜூன் சம்பத்!

மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுகவினர் கூறிவரும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டும் வகையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரானதாக இருப்பதால் திமுக பாஜகவை எதிர்க்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இதே நிலை தொடர்கிறது. இத்தகைய சூழலில் மத்திய பாஜக அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கும் விவாதத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டும் அர்ஜூன் சம்பத்!

இதுகுறித்து சட்டமன்றத்தில் எழுந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஒன்றியம் என்பது தவறான சொல் இல்லை. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து தான் என் ஒன்றியம். அந்த வார்த்தையில் கூட்டாட்சித்துவம் அடங்கி இருக்கிறது. அதை தொடர்ந்து பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என தெரிவித்திருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டும் அர்ஜூன் சம்பத்!

இந்த நிலையில், கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் என ஸ்டாலினை அழைக்கலாம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக தமிழக அமைச்சர்களும் முதல்வரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகின்றனர். ஸ்டாலினையும் முதல்வர் என்று அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல. அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். இதை நான் சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்டம் 123 வது பிரிவு சொல்கிறது.

திமுக அரசு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’, என்று கூறுவதை ஏற்றுக் கொள்பவர்கள் ஸ்டாலினை ஆலோசனை குழு தலைவர் என்று அழைப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.