சொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்! அரியலூரில் பரபரப்பு!

 

சொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்! அரியலூரில் பரபரப்பு!

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை. இவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும் கலைச்செல்வன், கலைவாணன் என்ற மகன்களும், கமலா என்ற மகளும் உள்ளனர். மின் வாரிய ஊழியரான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்து திருமழபாடியை சேர்ந்த சங்கீதா என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கனகசபை – முதல் மனைவி அம்சவள்ளி தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.இவரின் பூர்வீக சொத்துக்கள் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டதாகவும், மகளை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

சொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்! அரியலூரில் பரபரப்பு!
இந்நிலையில் 3 நாள்களில் ஆக்க முகவராக பதவி உயர்வு பெற இருந்த நிலையில் கனகசபை நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பமாக அவரின் மகன்களே அவரை கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்தால் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கும் என்பதால் முதல் தாரத்து மகன்கள் இரண்டு பேரும் கனகசபையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்றுமுன்தினம் அலுவலகம் சென்று மின்சார அளவீடுகளை எழுதிவிட்டு வந்தவரை கழுத்தறுத்து கொன்றுள்ளனர்.

சொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்! அரியலூரில் பரபரப்பு!

இதை தொடர்ந்து கொலை செய்த கலைச்செல்வன் மற்றும் கலைவாணனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.