• February
    27
    Thursday

Main Area

Main



ஆட்களைக் கொல்லும் 'அரிசி ராஜா' யானை : முகாமில் வைத்து வளர்க்க வனத்துறை முடிவு!

அரிசி ராஜா யானை
அரிசி ராஜா யானை

பொள்ளாச்சி அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் அர்த்தனாரிபாளையம் என்னும் பகுதியில் காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சென்று, வீட்டில் உள்ள அரிசியைச் சாப்பிட்டுவிட்டு, வயல்வெளிகளைச் சேதப்படுத்திவிட்டுச் சென்று விடுமாம். அந்த யானை வழக்கமாக அங்கு வருவதால் அந்த யானைக்கு அரிசி ராஜா என்று பெயரை வைத்து அழைத்து வந்துள்ளனர்.

Elephant

திடீரென இந்த யானை அங்கு வசிக்கும் மாகாளி என்னும் முதியவர் மற்றும் 6 வயது பெண் குழந்தையைக் கடந்த மாதம் தாக்கி கொன்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ராதாகிருஷ்ணன் என்னும் நபரை அடித்துக் கொன்றுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதனைப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரிசி ராஜா

அதனையடுத்து, அந்த யானையைப் பிடிக்க சுமார் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்த யானைக்கு அரிசி மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசியைக் கொட்டி அதனை யானை உண்ணும் போது மயக்க ஊசி போட்டு அதனைப் பிடித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். அதனைப் பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகளையும் வரவழைத்துள்ளனர். அதனைப் பிடித்த பிறகு, டாப்சிலிப் வரக் காழியார் முகாமில் வைத்து வளர்ப்பு யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

2018 TopTamilNews. All rights reserved.