“சிலருக்கு தேவைப்படும்போது நல்லவர்களாக தெரியும் நாம்..” : மு.க அழகிரி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாவின் வாசகம்!

“சிலருக்கு தேவைப்படும்போது நல்லவர்களாக தெரியும் நாம்..” : மு.க அழகிரி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாவின் வாசகம்!

அறிஞர் அண்ணாவின் வாசகங்கள் மு.க. அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேனராக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. திமுகவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகன் மு.க அழகிரி, தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இது, அவர் மீண்டும் திமுகவில் இணைகிறாரா? புதிதாக கட்சி தொடங்குகிறாரா? வேறு கட்சிக்கு ஆதரவு வழங்கவிருக்கிறாரா? என்ற பல கேள்விகளுக்கு வழி வகுத்தது.

“சிலருக்கு தேவைப்படும்போது நல்லவர்களாக தெரியும் நாம்..” : மு.க அழகிரி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாவின் வாசகம்!

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆதரவாளர்கள் ஒப்புதல் அளித்தால் புதிய கட்சி தொடங்குவேன் என்று மு.க. அழகிரி கூறினார். தென் மாவட்டங்களில் செல்வாக்கை பெற்றிருக்கும் மு.க.அழகிரி திமுகவின் வாக்குகளை சிதைக்க புதிய கட்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், மதுரை பாண்டி கோவில் அருகே இருக்கும் துவாரகா பேலஸில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறார் மு.க அழகிரி.

“சிலருக்கு தேவைப்படும்போது நல்லவர்களாக தெரியும் நாம்..” : மு.க அழகிரி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாவின் வாசகம்!

அக்கூட்டத்தில் பங்கேற்க 15,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. துவாரகா பேலஸின் மேடையில், “பிறர்க்கு தேவைப்படும்போது நல்லவர்களாக தெரியும் நாம், தேவைகள் தீர்ந்ததும் கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம்” என்ற அண்ணாவின் வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது உற்று நோக்கப்படுகிறது.