Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ’ஜிம்’க்குச் செல்பவரா நீங்கள்? – அவசியம் இந்த 8 விஷயங்களைப் பின்பற்றுங்கள்

’ஜிம்’க்குச் செல்பவரா நீங்கள்? – அவசியம் இந்த 8 விஷயங்களைப் பின்பற்றுங்கள்

உடலை வலுவாக்காவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உடற்பயிற்சிகள் அவசியம். வீட்டில் எளிமையாக உடற்பயிற்சிகள் செய்பவர்களும் உண்டு. பலர் உடற்பயிற்சி கூடமான ஜிம்க்குச் சென்று பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

ஜிம்க்குச் செல்வது நல்ல பழக்கமே. ஏனெனில், நம் உடல் வாகுக்கு ஏற்றவாறு மாஸ்டர் ஒருவர் தேர்ந்தெடுத்த பயிற்சிகளை அளிப்பதை நாம் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும்.

பலர் தாமாகவே உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது தசை பிடிப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எது ஒன்றையுமே ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டலோடு செய்வதே சிறந்தது.  ஏனெனில், நம் உடலுக்கு ஒத்தே வராத பயிற்சிகளைச் செய்யும் பழக்கத்தை நாம் மேற்கொள்ளாதிருக்க முடியும்.  வீண் செலவும் நேரம் செலவழித்தலும் குறையும்.

கொரோனா நோய்ப் பரவல் தொடங்கியதும் மார்ச் மாத இறுதியிலிருந்து இந்தியாவில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அந்தப் பட்டியலில் இடம்பெற்றது ஜிம். இதனால் பலர் உடற்பயிற்சிகள் செய்வதையே தவிர்த்து விட்டார்கள்.

லாக்டெளன் தளர்த்தப்படும்போதெல்லாம் ’ஜிம்’க்கு விலக்கு கிடைக்குமா என்று ஆவலோடு எதிர்பார்த்தவர்கள் ஏராளம். இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து உடற்பயிற்சிக்கூடங்கள் இயங்க அனுமதி அளித்துவிட்டது அரசு.

அதனால் ஆர்வத்துடன் ஜிம்க்குச் சென்றுவருகிறார்கள். கொரோனா காலம் என்பது முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் தற்போது உச்சத்தில் இருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்புள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று,

எனவே, ஜிம்க்குச் செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. அதற்கு உங்களுக்கு உதவும் 8 வழிமுறைகள்.

ஒன்று: நீங்கள் செல்லும் ஜிம் பாதுகாப்பானதாக இருக்கிறதா… அங்கு கொரோனா பாதித்தவர்களை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் அலட்சியம் காட்டும் ஜிம் எனில் அங்குச் செல்வதைத் தவிருங்கள்.

இரண்டு: அதிக கூட்டம் வரும் நேரங்களில் செல்ல வேண்டாம். முடிந்தால் ஜிம் பயிற்சியாளருடன் பேசி ஒவ்வொரு செட்டாக வந்துபோகும் முறையை ஏற்படுத்துங்கள். அதில் உங்களுக்கு என ஒதுக்கும் நேரத்தில் சரியாகச் சென்று ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே முடித்து புறப்பட்டுவிடுங்கள்.

மூன்று: உங்களுக்குத் தேவைப்படும் தண்ணீர் பாட்டில், டவல் போன்றவற்றை வீட்டிலிருந்தே எடுத்துச் சென்றுவிடுங்கள். யாரிடமும் இரவல் கேட்காதீர்கள். அதன்வழியே நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது அல்லது உங்களுக்குக் கொடுக்க மற்றவர் தயங்கக்கூடும்.

நான்கு: கையுறைகளை கட்டாயம் அணிந்துசெல்லுங்கள். அதேபோல ஸ்வெட் பேண்ட் அணிந்துகொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவை உங்களின் வியர்வையை உறிஞ்சுக்கொள்ளும். கையுறைகள் அணிந்திருந்தாலும் மூக்கு, கண், காது உள்ளிட்ட பகுதிகளைத் தொடாதீர்கள்.

ஐந்து: மாஸ்க் அணிந்துகொள்வதைத் தவிர்க்காதீர்கள். சில உடற்பயிற்சியின்போது மாஸ்க் அணிந்திருப்பது மூச்சு விட சிரமாக இருக்கும். அதற்காக சற்று தளர்வான மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்.

ஆறு: உடற்பயிற்சி உபகரணங்களைத் தொடுவதற்கு முன் சானிடைஸர் தெளித்து, கைகளைத் தேய்த்துக்கொள்ளுங்கள். அதேபோல, பயிற்சி முடிந்ததும் மீண்டும் சானிடைஸர் தெளித்து கைகளைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அலுப்பு கொண்டு அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ஏழு: உங்களின் நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கச் செல்வீர்கள். அதனால், ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொள்ளவோ, கைக்குலுக்கவோ ஆசை இருக்கும். ஆனால், அவற்றைத் தவிருங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் கட்டாயம். சின்ன கவனக்குறைவு கூட பெரிய ஆபத்தை உருவாக்கி விடலாம்.

எட்டு: உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், அது சாதாரணமான விஷயமாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் ஜிம்க்குச் செல்வதற்கு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் உங்கள் ஜிம்க்கு வந்துசெல்வோரின் உடல்நிலையைப் பற்றி அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களில் யாருக்கேனும் கொரோனா பாதித்தால் நீங்கள் இன்னும் எச்சரிக்கையோடு இருங்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நிவர் புயல், மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முதல்நாள் நள்ளிரவு 2 மணிக்கு மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலோர மாவட்டங்களையும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கும்...

“நிவாரண உதவிகள் வழங்க ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கிறார்”-கட்சி நிர்வாகி பேச்சு

திருப்பத்தூ நிவர் புயல் நிவாரண உதவிகளை துரிதப்படுத்த வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பதாக, அக்கட்சி நிர்வாகி வேதனை தெரிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர்...

முதல்வருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முதல்நாள்...

கொரோனாவுக்கு அப்புறம் இதான் முதல்முறை: வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நீண்ட நாட்களுக்கு பின் திரை முன் தோன்றிய நடிகை வனிதா விஜயகுமார், கொரோனா லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர்பாலை எளிமையாக திருமணம் செய்துகொண்டார். முதல்...
Do NOT follow this link or you will be banned from the site!