இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

 

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

கொரோனா தாக்கம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் இருந்து வருகிறது. அதனால், அம்மாத இறுதியிலிருந்து லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால், பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அனைத்து வகையான அலுவலகங்களும் மூடப்பட்டன.

பலரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். ஐடி பணியாளர்கள் மட்டுமல்ல பார்மஸி, மீடியா உள்ளிட்ட பல துறையினரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு வந்துவிட்டனர்.

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

சில அலுவலகங்கள் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் முறையையே நீட்டிக்கலாமா என்றும் யோசித்துவருகின்றன. இந்த முறையில் முதன் அம்சமே அதிகநேரம் இயர் போன் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஏனெனில், காலையில் ஒரு மீட்டிங் போட்டுதான் வேலையே தொடங்கும். அப்போது நிச்சயம் ஒரு மணிநேரம் இயர்போனோடுதான் இருக்க வேண்டும்.

மீண்டும் அவ்வப்போது மீட்டிங் அல்லது பாட்டு கேட்டல் என இயர்போனை அடிக்கடி பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். சிலருக்கு மீட்டிங் நேரத்தில் இயர்போன் பயன்படுத்த ஆரம்பித்து அப்படியே பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது என்பது பழக்கமாக்கி இருப்பார்கள்.

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

பலருக்கு வேலை நேரம் முழுவதுமே இயர்போன் அணிந்திருக்க வேண்டியதாக இருக்கும். தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் வேலை செய்கையில் வரும் போன் காலை அட்டெண்ட் பண்ண இயர்போனைப் பயன்படுத்துவார்கள்.

இப்படி எப்படி… எதற்காகப் பயன்படுத்தினாலும் இயர்போன் அதிக நேரம் உங்கள் காதுகளில் இருக்கிறது என்பது உண்மை. அதனால், உங்களின் வேலை எளிதாகலாம். ஆயினும் சில பிரச்னைகளும் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்வது நல்லது.

ஒன்று: முதல் விஷயம் நல்ல தரமான இயர்போனை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தரமற்றது எனில், ஒலியின் அளவை நீங்கள் குறிப்பிட்ட அளவு வைத்தாலும் அதிகமாகி விடக்கூடும். சீக்கிரமே வீணாகி விடும். அப்போது புதிதாக வாங்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ப உங்கள் காதில் பொருத்தும் அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

இரண்டு: பொதுவாக, நம் காதுகாள் 40 டெசிபிள் ஒலியைக் கேட்கும் சக்தியைத்தான் பெற்றிருக்கின்றன. ஆனால், சில அதிக சத்தம் வருமளவு அதாவது 60, 70 டெசிபிள் ஒலி அளவில் பாடல் கேட்பது, படம் பார்ப்பது என்று இருக்கிறார்கள். இதனால், காதில் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம் என்கிறார்கள். எனவே, அளவான ஒலியளவில் இயர்போனை செட் பண்ணிக்கொள்வது மிகவும் அவசியம்.

மூன்று: என்னதான் வேலைப் பளுவாக இருந்தாலும் தொடர்ந்து நீண்ட நேரம் இயர்போனைப் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதனால் காதின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் காது வலி உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

நான்கு: இயர்போனைப் பயன்படுத்தும்போது உலகமே கத்தினாலும் உங்களுக்குக் கேட்காது. அது ஒருவகையில் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது போலாகி விடும். எனவே, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வீட்டில் உள்ளவர்களோடு பேசுவது, குழந்தைகளோடு விளையாடுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் தனிமை சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கு நேரிடாது இருக்கும்.

ஒருவேளை அறையில் தனிமையாக இருப்பவர் எனில், வீட்டை விட்டு பாதுகாப்போது வெளியே வந்து இயல்பான ஒலியைக் கேளுங்கள். எப்படியேனும் இயர்போன் ஒலியிலிருந்து விடுவித்து அவ்வப்போது ஓய்வெடுங்கள்.

இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 5 விஷயங்கள் உங்களுக்குத்தான்

ஐந்து: இவையெல்லாம் முறையாகக் கடைப்பிடித்தால்கூட காது வலி போன்ற ஏதேனும் சின்னச் சின்ன பிரச்னைகள் வரலாம். அப்போது மெடிக்கல் ஷாப்பில் நீங்களாக ஒரு மருந்தை வாங்கி காதில் ஊற்றிக்கொள்வது என்றில்லாமல், முறையான மருத்துவரைச் சந்தித்து காட்டுங்கள். அவர் தரும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அலட்சியம் வேண்டாம். சின்ன அலட்சியம்கூட பின்னாளில் பெரிய பிரச்னையை இழுத்து வந்துவிடக் கூடும்.