’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

 

’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

குழந்தைகளுக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தவர்கள் அவர்களின் பேரண்ட்ஸ்தான். அதேபோல பேரண்ட்ஸ்க்கும் எல்லோரையும் விட குழந்தைகளைத்தான் பிடிக்கும் எனத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக்கொடுக்கவே நினைப்பர். குழந்தைகள் கேட்கும் பொருள்களை, விருப்பங்களை நிறைவேற்றவே முயற்சி செய்வார்கள்.

’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

தங்களின் வாழ்வே குழந்தைகளுக்காகவே என்று வாழும் பேரண்ட்ஸ் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.  குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதோ, தங்கள் கனவை பிள்ளையின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதோ அவசியமான ஒன்றே.

ஆயினும் இன்னும் சில விஷயங்களை இன்றைய காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள பெற்றோர்கள் தயராக இருக்க வேண்டும். அதற்கான சில கேள்விகளைப் பார்ப்போமா? (குழந்தைகள் என்பதற்கு இந்தியச்  சட்டம் 18 வயது வரை என்று சொல்கிறது. நாமும் அந்த வரையறைக்குள் கேள்விகளைத் தொகுத்துக்கொள்வோம்)

’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

இந்தப் பதில்களை எங்களுக்கு நீங்கள் கூற தேவையில்லை. உங்களுக்கு நீங்களே கூறுங்கள். உண்மையான பதிலைக் கூறுங்கள். அதுதான் முக்கியம்.

  1. உங்கள் குழந்தை விளையாட எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்.உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து நீங்கள் அதை முடிவு செய்திருக்கலாம். ஆனால், ஒரு குழந்தை உறங்குவதற்கு நேரம் ஒதுக்குவதுபோல, படிபதற்கு நேரம் ஒதுக்குவதைப்போலவே நிச்சயம் விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும்.
  2. உங்கள் குழந்தை மதிப்பெண்கள் குறித்து பேசுவீர்களா… உரையாடுவீர்களா?பேசுவதற்கும் உரையாடுவதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. பேசுவது என்பது ஒருவழிப் பாதை. அது உங்களிடமிருந்து மட்டுமே செல்லும். மதிப்பெண் ஏன் குறைந்தது என்பதைப் பற்றி உங்கள் குழந்தை சொல்ல எவ்வளவோ செய்திகள் இருக்கும். அதைக் கேட்க, அக்குழந்தை மிக உரிமையுடன் பேசும் சுதந்திர வெளியை வழங்குங்கள்.

    ’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

  3. உங்கள் குழந்தை ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?பணம் சம்பாதிப்பது பெற்றோர்கள்தான். அதனால் விலை குறைவான பொருள் எனில், விட்டுவது, விலை அதிகமான பொருள் எனில் திட்டுவது அடிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்காதீர்கள். எந்தப் பொருளாக இருந்தாலும் எங்கு தொலைந்திருக்கக்கூடும், எப்படித் தவறியிருக்கக்கூடும் என்பதாக உரையாடுங்கள். அடுத்த முறை அம்மாதிரி தொலைத்திடாமல் இருக்க அது உதவும்.
  4. உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியை யார் செய்கிறார்கள்?பெரும்பாலும் பெற்றோர்கள்தான். எவ்வளவு ஃபீஸ், பள்ளியின் அந்தஸ்து, அங்கு படித்தவர்கள் என்ன வேலையில் இருக்கிறார்கள்…. உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைப் பார்த்துதான் முடிவு செய்கிறீர்கள். ஆனால், அப்பள்ளியின் ஒருநாளின் பெரும்பகுதியைச் செலவழிக்க இருக்கும் உங்கள் குழந்தை அப்பள்ளியில் படிக்க விரும்புகிறதா என்று கேட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அடுத்த பள்ளியில் சேர்க்கையில் நிச்சயம் கேளுங்கள்.

    ’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

  5.  குழந்தையின் டியூசன் நேரத்தை யார் முடிவு செய்கிறார்கள்?

    பள்ளியை முடிவு செய்ய அனுமதிக்க நிலையில் இதையாவது முடிவு செய்ய குழந்தையை அனுமதியுங்கள். ஏனெனில், படிக்கும் மனநிலை ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். எனவே, அதற்கேற்ப அதுவே முடிவு செய்யட்டுமே. இன்னும் சொல்லப்போனால் டியூசன் வேணுமா… வேணாமா என்றும்கூட முதலில் கேட்கலாம்.

  6. உங்களின் குழந்தை ஆண் எனில் பெண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவர அனுமதி கேட்டால் என்ன சொல்வீர்கள்? (உங்கள் குழந்தை பெண் எனில், ஆண் நண்பர்களை அழைத்து வர அனுமதி)

    பலரும் 7, 8 –ம் வகுப்பு வரை அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் அனுமதிக்க மறுக்கிறார்கள். அதற்கு இரண்டு காரணம், ஒன்று அக்கம் பக்கம் என்ன சொல்வார்களோ என்று. அப்படியெனில் அதைத் தூர எறியுங்கள். அடுத்தது, எதிர்பாலின ஈர்ப்பு மூலம் காதல் ஏற்பட்டு விடுமோ என்று. அப்படியெனில், அதற்கான தெளிவை உங்கள் குழந்தைக்கு கொடுக்க வில்லை என்று அர்த்தம். அதற்கான பயிற்சிகளை அளியுங்கள்.

    ’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

  7. மேற்படிப்புக்கு பாடப்பிரிவுகளை யார் முடிவு செய்வது?எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர் என்ற கனவுகளைச் சுமக்கும் நீங்கள், அதை ஒட்டி குழந்தையின் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்காதீர்கள். அதுவரையிலான கல்வி முறையில் உங்கள் குழந்தையின் விருப்பம் எந்தப் பாடப் பிரிவை நோக்கி உள்ளதோ அதை மையமாகக் கொண்டு தேர்ந்தெடுங்கள்.
  8. உங்கள் குழந்தையின் உடைகளை யார் செலக்ட் செய்கிறார்கள்?இதில் பெரும்பாலும் குழந்தையின் விருப்பத்திற்கு விடவே பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால், பட்ஜெட் எனும் ஒரு விஷயம் அவர்களைத் தடுக்கும். அதை நீங்கள் மறைக்கத் தேவையில்லை. இவ்வளவு ரூபாய்க்குள் நல்ல உடைகளாக எடுக்கமாறு சொல்லி, அவர்களுக்கு உதவவும் செய்யலாம்.

    ’ நீங்க நல்ல பேரன்ட்ஸ்தானா… செக் பண்ணும் 10 கேள்விகள்!

  9. பகுதி நேரமாக வேலைக்குச் செல்கிறேன் என்று குழந்தை சொன்னால்…

    அரசு விதிப்படி 14 வயதுக்கு முன் எந்தக் குழந்தையும் வேலைக்கு அனுப்பக்கூடாது என்பதை மனதில்கொள்ளவும். அதைக் கடந்த குழந்தை எனில், என்ன வேலை… வேலை பார்க்கும் இடம் பாதுகாப்பானதா உள்ளிட்டவை குறித்து நன்கு ஆராய்ந்து வேண்டும்… வேண்டாம் என்ற முடிவுக்கு வாருங்கள்.

  10. 18 வயது வரை குழந்தைகள் எனும்போது, 17 வயதுள்ள உங்கள் குழந்தை, யாரோ ஒருவரை காதலிக்கிறேன் என்று உங்களிடம் சொன்னால்..

    அடிப்பது உதைப்பது, இதெல்லாம் காதலிக்கும் வயதா எனக் கேட்பது… போன்றவை செய்வதைத் தவிருங்கள். இது அல்ல எதிர்காலத் துணையைத் தேடும் வயது என்பதை புரிய வையுங்கள். அதற்கு யார் உதவியை நாட வேண்டுமோ அவர்களைப் பயன்படுத்துங்கள். ஆனால், எக்காரணம் கொண்டும்   யார் பேச்சைக் கேட்டும் உங்கள் குழந்தையின் படிப்பை நிறுத்தி விடாதீர்கள். அதை விட பெரு தண்டனை அக்குழந்தைக்கு வேறு எதுவும் இல்லை.