ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்பவரா நீங்கள்… இந்த 10 விஷயங்களுடன் ரெடியாகுங்கள்!

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் சூழலில் அலுவலங்கள் இயல்பாக இயங்க முடியா நிலை. எனவே, பலரையும் வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சொல்லியுள்ளது அந்தந்த நிறுவனங்கள். பணியாளர்களோடு தொடர்பில் இருப்பதற்கும், வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் தினமும் ஆன்லைனில் வீடியோ மீட்டிங் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் மட்டுமல்லாது இலக்கியம், இசை, வகுப்புகள் நடத்துபவர்கள் எனப் பல துறையினரும் ஆன்லைன் வீடியோ மீட்டிங் என்பதைப் பின்பற்றி வருகின்றனர்.

பொதுவாக ஒரு மீட்டிங் என்றால் அதற்கு நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டு கலந்துகொள்வோம். ஆனால், வீட்டிலிருந்து கலந்துகொள்ளும்போது சிலர் அப்படிச் செய்வதில்லை. ஆன்லைன் மீட்டிங் என்றால் கீழ்காணும் 10 விஷயங்களோடு தயாராகுங்கள்.

1. எத்தனை மணிக்கு மீட்டிங் என அறிவிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முன்பே குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்பே தயாராகிவிடுங்கள். மீட்டிங் ஆரம்பித்ததும் ஹெட்போனைக் காணோம். சத்தம் வரவில்லை என்றெல்லாம் பதற்றப்படுவதைத் தவிருங்கள்.

2. உடையில் கவனம் முக்கியம். வீட்டில்தானே இருக்கிறோம் என அலட்சியமாக ஏதேனும் ஒரு சட்டையைப் போட்டிருப்போம். ஆனால், அலுவலக ரீதியான மீட்டிங்கில் அது உங்களின் அலட்சியமாகப் பார்க்கப்படும். எனவே, அலுவலகத் தொடர்பான மீட்டிங் எனில் அதற்கு உரிய உடைகளோடு தயாராகுங்கள்.

3. நீங்கள் வீடியோவில் வரப்போகிறீர்கள் என்றால், உங்களின் பின்புறம் தெரியும் காட்சியும் கவனிக்கப்படும். அதனால் தேவையற்ற பொருள்கள் பின்புறம் இருப்பதாக அமைத்துக்கொள்ளாதீர்கள்.

4. நேரில் நடக்கும் மீட்டிங் எனில், ஒருவர் பேசும்போது இடைமறித்தால் பெரிய அளவு தொந்தரவு இருக்காது. ஆனால், ஆன்லைன் மீட்டிங்கில் ஒவ்வொருவரும் இடைமறித்துக் கேட்டால் அவரால் தொடர்ந்து பேச முடியாது. எனவே, ஒருவர் பேசும்போது என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக அவற்றைக் கேளுங்கள். அதற்காக நோட் பேட் மற்றும் பேனாவைத் தயாராக வைத்திருங்கள்.

5. ஆன்லைன் மீட்டிங்க்கு இணையத் தொடர்பு மிக அவசியம். அதனால், உங்களின் இணையத் தொடர்பு கட்டாகி விடாமல் பார்த்துக்கொள்ள டவர் இருக்கும் பகுதியாக உங்கள் இருக்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

6. மீட்டிங்கில் நீங்கள் பேச வேண்டிய இருக்கும்பட்சத்தில் மிகக் குறைந்த நேரத்தில் தெளிவாக விளக்குங்கள். அதற்கு உதவியாகக் குறிப்புகளோ ஸ்லைடுகளோ தயார் செய்துகொள்வது நல்லது.

7. கேமரா மற்றும் ஆடியோ இரண்டும் சரியாக இயங்குகின்றனவா என்று மீட்டிங் தொடங்குவதற்கு முன்பே செக் செய்துகொள்வது நல்லது.

8.மீட்டிங் தொடங்கிய பிறகு வீட்டில் இருப்பவர்களோடு அவசியம் பேச வேண்டிய நிலை இருந்தால், வீடியோ, மைக் ஆகியவற்றை முறையாக ஆஃப் செய்துவிட்டு பேசுங்கள்.

9. மீட்டிங்கில் நிறைய பேர் கலந்துகொள்கிறார்கள். ஒருவர் பேசுகிறார், மற்றவர்கள் கேட்க மட்டுமே செய்கிறார்கள் என்றால் உங்கள் மொபைல் அல்லது கணினியின் மைக்கை கூட்டம் நடத்துபவர்கள் கூறுவதற்கு முன்பே ஆஃப் செய்துகொள்ளுங்கள். இந்த முறையை மற்றவர்களும் பின்பற்றினால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

10. பலர் பேர் கலந்துகொள்ளும் மீட்டிங்கில் ஒருவர் உரையாற்றிய பிறகு கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படும். அப்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை எழுதி தயாராக வைத்திருங்கள். ஒருவேளை அக்கேள்வியை உங்களுக்கு முன்பே யாரேனும் ஒருவர் கேட்டிருந்தால் நீங்கள் கேட்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

Most Popular

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

திருச்சி மற்றும் பல பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று...

“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …

பீகாரைச் சேர்ந்த 25 வயதான பிரிதிகுமாரி ராம், கடந்த நான்கு ஆண்டுகளாக அகமதாபாத்தின் வாஸ்னா பகுதியில் சாந்தனு சிங் மற்றும் கல்யாணி தம்பதிகளின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக வீட்டு வேலைகள் செய்து வந்தார்...