சென்னையில் பயிற்சி எடுக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? #IPL_Updates

 

சென்னையில் பயிற்சி எடுக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? #IPL_Updates

கொரொனா நோய்த் தொற்றால் பாதிக்காத துறைகளே கிடையாது என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு உலகத்தின் சுழற்சியையே மாற்றி அமைத்துவிடும் போலிருக்கிறது இந்தக் கொரோனா வைரஸ்.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் முடிந்தளவு ஒத்திப்போடப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க போட்டியைக் கைவிடும் முடிவை எடுக்கும் என நினைத்தனர் ரசிகர்கள்.

சென்னையில் பயிற்சி எடுக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? #IPL_Updates

ஆனால், ஐபிஎல் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல… பெரும் வியாபாரமும்கூட. இந்த ஆண்டு போட்டிகளை நடத்தா விட்டால் சுமார் 4000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதனால், ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19 ல் தொடங்கி நடத்துகிறது ஐபில் நிர்வாகம்.

இதற்காக சென்னையில் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஸ் சாவ்லா, தீபக் சாகர், மோனுகுமார், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என ரிசல்ட் வந்தபிறகே பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் பயிற்சி எடுக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? #IPL_Updates

கொரோனா டெஸ்ட் எடுத்தாலும் சில கட்டுப்பாடுகளுடன் தான் இந்த 6 வீரர்களும் பயிற்சி எடுக்க வேண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அப்படி என்னென்ன கட்டுப்பாடுகள்?

சக வீரர்களுடன் கைக்குலுக்குவதோ கட்டி அணைத்துக்கொள்வதோ கூடாது. அதேபோல, பயிற்சி நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, தனி மனித இடைவெளியைப் பேண வேண்டியது கட்டாயம்.

பயிற்சியாளர்கள் மட்டுமன்றி, மைதானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் ஹோட்டலில் தங்கியிருக்கும்போது அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் வேறு எவரும் நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

சென்னையில் பயிற்சி எடுக்கும் ஐபிஎல் வீரர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? #IPL_Updates

இத்தனைக் கட்டுப்பாடுகளோடு எப்படி வீர்ர்கள் தங்களின் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில், இந்தக் கட்டுப்பாடுகள் ஐபிஎல் முடியும்வரை கூட தொடரக்கூடும். அதிகம் பேசாமல், தனியாக இருப்பது எல்லாம் வீரர்களின் ஆட்டத்தைப் பாதிக்கும் என்கிறார்கள்.