LPL போட்டிகள் இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா?

 

LPL போட்டிகள் இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா?

இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளின் மாபெரும் வெற்றி பல நாடுகளை அவ்விதமான போட்டிகளை நடத்தும் ஆவலைத் தூண்டியுள்ளது. இதனால் இரண்டு பலன்கள். உள்ளூரில் தகுதியான வீரர்களைக் கண்டறிவதும், அவர்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இரண்டாவது கிரிக்கெட் சங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

LPL போட்டிகள் இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா?

இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் போலவே எல்.பி.எல் எனும் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.

LPL போட்டிகள் இலங்கையிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா?

இந்நிலையில் இலங்கையில் கொரோனா பாதிப்பு சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. அதனால், நாட்டின் பல இடங்களின் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளது இலங்கை அரசு. இந்தச் சூழலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டமாக ஓரிடத்தில் கூடி போட்டியைக் காண்பது என்பது கொரோனா தொற்றை அதிகரிக்கச் செய்யும் எனப் பலரும் கருதினர்.

லங்கா பிரீமியர் தரப்பில், போட்டிகளை எப்படி… எங்கே நடத்துவது எனத் தீவிரமான ஆலோசனை நடைபெறுகிறதாம். இலங்கையின் ஒரே மைதானத்தில் எல்.பி.எல் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் நடத்துவதா அல்லது வேறு நாட்டில் போட்டிகளை நடத்துவதா என்பதே ஆலோசனையாம். அவர்களின் வெளிநாட்டுத் தேர்வில் ஐக்கிய அமீரக நாடுகளும், மலேசியாவும் இருக்கின்றனவாம். இப்போது இலங்கையின் கொரோனா சூழலில் நிச்சயம் இலங்கையில் எல்.பி.எல் நடக்க வாய்ப்பு குறைவு என்பதே யதார்த்தம்.