ஐபிஎல் மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதியா? #IPL_Updates

 

ஐபிஎல் மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதியா? #IPL_Updates

ஐபிஎல் போட்டிகளை உற்சாகமாக மாற்றுவதே, ஐபிஎல் தீம் மியூசிக் போட்டவுடன் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் கொடுக்கும் சத்தம்தான்.

ஆனால், கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மேட்ச், ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதிதான் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு வீரருக்கு இருமுறை கொரோனா டெஸ்ட் எடுப்பது, அதன் முடிவு வரும்வரை தனிமையில் இருக்க வைப்பது, நெகட்டிவ் என வந்தாலும் குழுவாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது, வெளியாட்களைச் சந்திக்க தடை, சக வீரர்களுடன் கை குலுக்குவது, கட்டி அணைப்பது உள்ளிட்ட தடைகள் ஏராளம்.

ஐபிஎல் மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதியா? #IPL_Updates

இந்த நிலையில் ரசிகர்கள் டிவியில்தான் மேட்சைப் பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்களை அனுமதிக்க ஐக்கிய அமீரகத்தின் கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மைதானத்தில் எத்தனை பேரை அனுமதிக்கலாம், என்னவிதமான பாதுகாப்பு கட்டுபாடுகளை விதிக்கலாம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்துவருவதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதியா? #IPL_Updates

ரசிகர்களின் கை தட்டலும் விசிலும் இல்லாமல் போய்விடுமோ என்று தயங்கிய வீரர்களுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்திருக்கும். ஆயினும், கொரோனா வேகமாகப் பரவும் இந்தச் சூழலில் ரசிகர்களை அனுமதிப்பது அவசியமா என்ற கேள்வியும் எழுந்திருப்பதை மறுக்க முடியாது.