குஜராத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா? – பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

 

குஜராத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா? – பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. 4 லட்சம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் என்றால் மருத்துவக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுள்ளது. அவலக்குரல்கள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

குஜராத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா? – பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

இவையனைத்திற்கும் பிரதமர் மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது குஜராத் மரணம் குறித்து புது சந்தேகத்தை எழுப்பி விவாதத்துக்குள்ளாகியிருக்கிறார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “குஜராத்தில் கடந்தாண்டு மே மாத இறுதியில் 58 ஆயிரத்து 68 இறப்புச் சான்றிழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 873 இறப்புச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையே இருக்கும் வித்தியாசம் 65 ஆயிரத்து 85. ஆனால் குஜராத் அரசோ 4 ஆயிரத்து 219 கொரோனா மரணங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. மீதமிருக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்ததற்கான காரணம் என்ன?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.