ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளருக்கு அனுமதி உண்டா?

 

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளருக்கு அனுமதி உண்டா?

ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது லட்சக்கணக்கான வீரர்களின் கனவு. அந்த சில நிமிட போட்டிக்காக பல ஆண்டுகள் கடுமையாக பயிற்சி எடுத்துவருவார்கள். வழக்கமான திட்டத்தின்படி, இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

2021-ம் வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காகக் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசும் ஒலிம்பிக் குழுவும் ஈடுபட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளருக்கு அனுமதி உண்டா?

இந்நிலையில் வீரர்களுக்கான நெறிமுறைகள் குறித்து ஜப்பான் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார். அதன்படி, போட்டியில் வீரர்களும் அவர்களின் பயிற்சியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீரர்களைத் தனிமைப்படுத்துதல் எனும் முறை இருக்காது’ என்றே தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியின்போது ஒவ்வொரு வீரரும் இருமுறை கோவிட் 19 டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என வந்தபிறகு, குறிப்பிட்ட நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆனால், ஒலிம்பிக்கில் அந்த நடைமுறை என்றே தெரிகிறது.

போட்டிகள் தொடங்க இன்னும் எட்டு மாதங்கள் இருந்தாலும், முக்கியக் கேள்வியாக எல்லோரின் மனதிலும் இருப்பது ‘போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா?’என்பதுதான். ஏனெனில், ரசிகர்களின் மகிழ்ச்சி ஒரு பக்கம், வீரர்களுக்கு உற்சாகம் இன்னொரு பக்கம் என ரசிகர்களின் வருகை ரொம்பவே முக்கியமானது.

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளருக்கு அனுமதி உண்டா?

ஆனால், கொரோனா தொற்று காரணமாக பல விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகின்றன. இதுகுறித்து பேசிய ஜப்பான் ஒலிம்பிக் சங்கத் தலைவர், ‘இது குறித்து இன்னும் தீர்மானமான முடிவு ஒன்றையும் எடுக்கப்பட வில்லை. விரைவில் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.