“8,991 கொரோனா நோயாளிகள் ” இத்தனை பேர் மட்டும் தான் வாக்களிக்க விருப்பமா?

 

“8,991 கொரோனா நோயாளிகள் ” இத்தனை  பேர் மட்டும் தான் வாக்களிக்க விருப்பமா?

8,991 கொரோனா நோயாளிகள் 17 பேர் மட்டும் தான் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

“8,991 கொரோனா நோயாளிகள் ” இத்தனை  பேர் மட்டும் தான் வாக்களிக்க விருப்பமா?

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்னும் சில மணிநேரங்களில் முடிவடைய உள்ளது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்களிக்க செல்லும் போது உங்களது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, உங்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலோ, அல்லது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ நீங்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில், வாக்கு சாவடியில் கொடுக்கப்படும் கொரோனா கவச உடையை அணிந்து வாக்களிக்கலாம். என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது

“8,991 கொரோனா நோயாளிகள் ” இத்தனை  பேர் மட்டும் தான் வாக்களிக்க விருப்பமா?

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8,991 கொரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 24ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 60% மருத்துவமனைகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா சிகிச்சை பெறுவோரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்தது. இதனால் தேர்தல் முடியும் கடைசி ஒருமணிநேரத்தில் 6 மணிமுதல் 7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.