• February
    23
    Sunday

Main Area

Main



அஜித்துடன் இணையும் அரவிந்த்சாமி! வேற லெவலில் தயாராகும் ‘வலிமை’!

அஜித், அரவிந்த்சாமி
அஜித், அரவிந்த்சாமி

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 60 வது திரைப்படமாக வலிமை தயாராகி வருகிறது. போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தை  H.வினோத் இயக்குகிறார். ‘வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் ரசிகர்களிடையே இப்போதே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில், இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ajith

இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது ‘வலிமை’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அரவிந்த்சாமி தரப்பில் விசாரித்த போது, இதுவரையில் வலிமை படத்தில் அஜித்துடன் நடிப்பது குறித்து யாரும் பேசவில்லை என்றும், அஜித்துடன் நடிப்பதற்கு அரவிந்த்சாமியும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

ajith and arvindsamy

இன்றும் அரவிந்த்சாமிக்கு இளம்பெண் ரசிகைகள் அதிகளவில் இருக்கின்றனர். அஜித்தும், அரவிந்த்சாமியும் இணைந்தால் ‘வலிமை’ படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.