டெல்லியில் கொரோனா 4வது அலை; ஆனால் ஊரடங்கு போடமாட்டோம் – அரவிந்த் கெஜ்ரிவால்

 

டெல்லியில் கொரோனா 4வது அலை; ஆனால் ஊரடங்கு போடமாட்டோம் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா 4வது அலை; ஆனால் ஊரடங்கு போடமாட்டோம் – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் தற்போது கொரோனா பரவலின் 4 ஆவது அலை வீசி வருகிறது. அறிகுறி இன்றி தொற்றுக்கு ஆளாவோர் மருத்துவமனைக்கு ஓடாமல் வீட்டில் தனிமைப்படுத்துவது அவசியம். கொரோனா பரவல் கவலை அளித்த போதும் பொது ஊரடங்கை மக்களிடம் திணிக்கும் எண்ணம் இல்லை. எனவே முழு முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணமில்லை. சுகாதார உட்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் வரும்.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதற்கான வயது வரம்பை உடனடியாக நீக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், டெல்லியில்  படுக்கைகள் பற்றாக்குறையால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது ” என தெரிவித்தார்