ஆரவார திமுக – ஆக்கப்பூர்வ அதிமுக

 

ஆரவார திமுக – ஆக்கப்பூர்வ அதிமுக

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எல்லா கட்சிகளும் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கிவிட்டன. இதில் திமுக கொஞ்சம் அட்வான்சாக ’விடியலை நோக்கி… ஸ்டாலினின் குரல்’ என்கிற தலைப்பில் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக தரப்பில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த முகாம் அமைதியாகவே காணப்படுகிறது. ‘’அமைதிக்கு பின்னால் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

ஆரவார திமுக – ஆக்கப்பூர்வ அதிமுக

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது; ‘’குறைகுடம் கூத்தாடும் ; நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்பவே திமுக, அதிமுக செயல்பாடுகள் உள்ளன. முந்திரிக்கொட்டைத் தனமாக திமுக முன்கூட்டியே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதில் அந்த கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.முழுக்க கைக்காசை செலவழிக்க வேண்டியிருப்பதால் தலைமை மீது அவர்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். ‘கோடிகோடியா குவித்து வைத்திருப்பவர்கள் தேர்தல் நெருக்கத்தில் கூட அதை வெளியே எடுக்காவிட்டால் எப்படி?’ என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது. அத்துடன் கூட்டணி கட்சிகளுக்குள்ளும் ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்த விரிசல் கீழ்மட்டம் வரை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் எங்கள் கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேரடி கண்காணிப்பில் சத்தமில்லாமல் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் எடப்பாடியின் ஆலோசனையின் அடிப்படையில் வெற்றி வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஆரவார திமுக – ஆக்கப்பூர்வ அதிமுக


இந்தமுறை வேட்பாளர் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கெட்ட பெயர் வாங்காத இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுக தேர்தல் ஆலோசனைக் குழுவும் சர்வே அடிப்படையில் தனியாக பட்டியல் ஒன்றை தயார் செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக உளவுத்துறையும் தனது பங்கிற்கு எந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்பது பற்றிய ரிப்போர்ட்டை ரெடி பண்ணி வருகிறது.இந்த பட்டியல்களின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு இருக்கும். அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்தவர்களையே நிறுத்த வேண்டும் என்பதில் முதல்வர் ரொம்பவே கறாராக இருக்கிறார். சிபாரிசுகளை ஓரம்கட்டவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இதனால் இப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் பலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒருசில அமைச்சர்களுக்கும் இதே நிலைதான்.

ஆரவார திமுக – ஆக்கப்பூர்வ அதிமுக

அதிமுக அரசு செய்துள்ள ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லும் வேலைகளை முழு வீச்சில் தொடங்கும்படியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் ஐ.டி விங் போன்ற அணிகள் இந்த பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளன. கூட்டணி எப்படி அமைந்தாலும் 180 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதிலும் எடப்பாடி உறுதியோடு இருக்கிறார். இதை அடிப்படையாக வைத்தே அவர் ஆக்கப்பூர்வமாக காய்நகர்த்தி வருகிறார். அமைதியான இந்த நடவடிக்கைகள் நிச்சயம் எடப்பாடிக்கு மீண்டும் வெற்றியைப் பெற்றுத் தரும்.’’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.