’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

 

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி அரவக்குறிச்சி. 2.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் செந்தில்பாலாஜி, தொகுதியை மாற்றிக்கொண்டு கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதில் அக்கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கி இருக்கிறார். திமுக சார்பில் மொஞ்சனூர் இளங்கோ களமிறங்கியிருக்கிறார். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை நமது டாப் தமிழ் நியூஸ் டீம் தொகுதியில் வலம் வந்து சர்வே எடுத்திருக்கிறது.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

வெற்றி பெற்றவர்கள்:

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மாறிமாறி வந்திருக்கின்றன இந்த தொகுதியில். 1977 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சதாசிவம் வெற்றி பெற்றார். 80ல் அதிமுக வேட்பாளர் அலியாஸ்கந்தசாமி, 84ல் அதிமுக எஸ்.ஜெகதீசன், 89ல் திமுக மொஞ்சனூர் ராமசாமி , 91ல் அதிமுக மரியாமுல் ஆசியா, 96ல் திமுக முகம்மது இஸ்மாயில் எஸ்.எஸ்., 2001ல் அதிமுக லியாதீன் சையத், 2006ல் திமுக கலிலூர் ரகுமான், 2011ல்திமுக கே.சி.பழனிச்சாமி, 2016ல் அதிமுக செந்தில்பாலாஜி.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

2021 வேட்பாளர்கள்:

பாஜக – அண்ணாமலை
திமுக – ஆர்.இளங்கோ
அமமுக – பி.எஸ்.என். தங்கவேல்
மநீம – முகமது ஹனிப் சாஹில்
நாதக – ம.அனிசார் பர்வீன்

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

செந்தில்பாலாஜி எஸ்கேப்:

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் துணைத்தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார். 2016 தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி, பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்று பின்னர் அங்கிருந்து திமுகவுக்கும் சென்றபின்னர், அரவக்குறிச்சிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், அவர் இந்த தேர்தலில் மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிடவில்லை. கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இல்லையேல் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலைக்கும் அவருக்கும் கடுமையான போட்டி இருந்திருக்கும். செந்தில்பாலாஜி தொகுதியை மாற்றிக்கொண்டதால் அந்த பரபரப்பு அங்கே இல்லை.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

அண்ணாமலை சத்தியம்:

அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை, தொகுதி மக்களுக்கு தான் அளித்துள்ள வாக்குறுதிகள்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
2026க்குள் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நான்கு பெரிய மத்திய தொழிற்சாலைகளை கொண்டு வந்து 40,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இது சத்தியம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

திமுக வேட்பாளரின் சபதம்:

திமுக வேட்பாளர் இளங்கோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், அண்ணன் மொஞ்சனூர் இளங்கோ அவர்களை ஆதரித்து, அரவக்குறிச்சி பகுதி வேலம்பாடி ஊராட்சியில் கிராமம் கிராமமாக பிரச்சாரம். அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் வெல்லும் என்று சொல்லி வருவதை அண்ணாமலைக்கு பெரும் சவாலாகவே அமைந்திருக்கிறது.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

மக்களின் குமுறல்:

அரவக்குறிச்சியை யாருமே கண்டுக்கல, காசு, பணத்த கொடுத்து ஜெயிச்சிட்டு போயிடுறாங்க. அப்புறம் யாருமே திரும்பி பார்க்குறது இல்ல. தாலுகாவாக இருந்தும் ஒரு பஸ்நிலையம் கூட கிடையாது. ஒரு தாலுகாவில் பஸ் நிலையம் கூட இல்லேன்னா அந்த தொகுதி எப்படி இருக்கும்னு நீங்களே நினச்சுக்குங்க. சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி காணாமல் போனது போல், அரவக்குறிச்சியும் காணாமல் போய்விடும் போலிருக்குது.

யாரு வந்தாலும் கண்டுக்கிறதே இல்லை. சீமான் ஓராளவுக்கு கேரக்டர் நல்லாயிருக்கும் போல. ஆனாலும் சரிப்பட்டு வராதே என்று தெரிகிறது.
தம்பிதுரை இந்த தொகுதியில ஜெயிச்சு மந்திரி ஆனார். ஆனாலும் தொகுதிக்கு ஒண்ணும் செய்யல என்று தொகுதி மக்கள் குமுறுகின்றனர்.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

யாருக்கு வெற்றி:

எடப்பாடி, ஸ்டாலின் ரெண்டு பேருமே ஓட்டுக்காகத்தான் அது தள்ளுபடி, இது தள்ளுபடின்னு சொல்லுறாங்க. இந்த தள்ளுபடி அறிவிப்பும் ஏக்கர் கணக்குல வச்சிருக்கிற பணக்காரர்களுக்குத்தான். ஏழைகளுக்கு கிடையாது. ஏழைகளுக்கு ஆயிரம் , ரூபாயிரம் மட்டும்தான் என்று வெறுப்பை தெரிவிக்கும் இத்தொகுதி மக்களில் சிலர், ஓபிஎஸ் முதல்வராக வரவேண்டும் என்கிற விருப்பத்தினை தெரிவிக்கிறார்கள்.

’’ஓபிஎஸ்தான் முதல்வராக வரவேண்டும்’’

அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வென்றுள்ள இத்தொகுதியில் இந்த முறை இரண்டு கட்சிகளூக்குமே சம அளவில் ஆதரவு இருந்தாலும் திமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதிமுக – திமுக இருகட்சிகளுக்கும் அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சிக்கும் அதற்கு அடுத்தபடியாக மக்கள் நீதி மய்யட்திற்கும் ஆதரவு இருப்பது தெரிகிறது.

அரவக்குறிச்சியை பொறுத்தவரையிலும் கடந்த தேர்தல்களில் வாக்கு சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது. காசு பணத்தை கொடுத்து ஜெயிச்சிவிட்டு போயிடுவாங்க என்று மக்கள் சொல்வதை பார்த்தால் இத்தொகுதியில் ஓட்டுக்கு பணம் அதிகம் விளையாடுகின்றது போலிருக்கிறது. வாக்குசதவிகிதத்தின் எண்ணிக்கையும் அதை உறுதிப்படுத்துகிறது.

பணம் கொடுத்து வாக்கு வாங்குவதால்தான் தொகுதியை யாரும் கண்டுக்கவே இல்லை போலிருக்கிறது.