`பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க?!’- அறந்தாங்கி சிறுமி கொலையால் கொந்தளித்த ஹர்பஜன் சிங்

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், “நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 30ம் தேதி இரவு முதல் திடீரென மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இது குறித்து ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சிறுமியை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கடும் கண்டனத்தை தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா #JusticeforJayapriya’’ என தெரிவித்துள்ளார்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...