“தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய, திமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள்” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

 

“தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய, திமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள்” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய, திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கூட்டயின் தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனையொடடி, ஸ்டாலினுக்கு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அந்த பதிவில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய் திகழவும், திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதில், இசைப்புயல் – ஆஸ்கார் விருதாளரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாகவும், தமிழக மக்களின் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என உறுதி அளித்து உள்ளார்.