• April
    07
    Tuesday

Main Area

Main



தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஏ.ஆர். ரஹ்மான்!

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 99 Songs என்ற படத்தை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான்  என்ற திரைப்படத்தை தயாரித்துவருகிறார். இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஹ்மான்,  “தயாரிப்பாளராய் மாறவேண்டும் என முடிவெடுத்ததிலிருந்து புதிதாய் பிறந்தது போல் உணர்கிறேன். முற்றுலும் புதுவிதமான அனுபவத்தை இது கொடுக்கிறது. இசைத்துறையில்  இசையமைப்பாளராக எனக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளராக அறிமுகமாகும்போது திரைத்துறைக்குள் முதலில் அடியெடுத்து வைப்பதுப்போல் உள்ளது. இதிலும் எனது முழு திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். 

ar rahman

99 Songs  படத்தின் இயக்குநரும், நடிகர்களுமே புது முகங்கள் தான். எனது தயாரிப்பாளர் பணிக்கு எனது மனைவியும் மகள்களும் மிகுந்த உறுதுணையாக இருந்தனர்” என தெரிவித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.