• December
    14
    Saturday

Main Area

Main



அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்ய போதோ..! பதறும் ஏ.ஆர். முருகதாஸ்

 ரஜினிகாந்த்
 ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து தர்பார் படத்தின் இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

darbar

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். தற்போது ரஜினி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

rajini

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்  வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ரஜினி சார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். யாரை பற்றியும் தப்பா பேசமாட்டாரு. நல்ல விதமா தான் சொல்வார். சாதாரணமாக இருப்பார், மனசில் பட்டத செய்வார். இந்த அரசியல்  சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோன்னு கவலை தான்' என்றார். 

முன்னதாக வரும் நவம்பர் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.