ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

விரைவில் ஆட்சி காலம முடிவடைய உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கட்நத வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்
ஏப்ரல் 6

அதேசமயம் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முறையே 3 மற்றும் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.. புதுச்சேரி யூனியன் மற்றும் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ம் தேதியன்று, புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 40 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகளுக்கும் என மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தோதல் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம்

மேலும் கேரளாவில் காலியாக உள்ள மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்தின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ம் தேதியன்றுதான் தேர்தல் நடைபெற உள்ளது. ஆக, ஏப்ரல் 6ம் தேதி மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக இருக்கும். புதுச்சேரி யூனியின் பிரதேசம் மற்றும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், 2 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.