செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

 

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

அந்தரங்க வீடியோக்கள்

சார், என்னுடைய அந்தரங்க வீடியோக்களைக் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு செல்போன் ரீசாஜ் கடையில் வேலைப்பார்க்கும் சகாபுதீன் மிரட்டுகிறார் என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-வருண்குமாரிடம் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் கூறினார். அதைக்கேட்ட எஸ்.பி வருண்குமார், அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்க, அந்தப் பெண், என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதனால் தனிமையில் வாழும் நான் ஒருநாள், எங்கள் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றிருந்தேன்.

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி
SP Varunkumar

அப்போதுதான் அந்தக் கடையில் வேலைப்பார்த்த சகாபுதீனைச் சந்தித்தேன். ரீசார்ஜ் செய்ய என்னுடைய செல்போன் நம்பரை அவரிடம் கூறினேன். அதன்பிறகு வீட்டுக்கு வந்த சில தினங்களுக்கு பிறகு சாகபுதீன் என்னிடம் போனில் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல நண்பர் போலவே என்னிடம் அன்பாக பேசிய அவர், ஒருகட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறினார். அவரின் அன்பான பேச்சு, ஆறுதலான வார்த்தைகளை உண்மையென நம்பி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன்.

காட்டுப்பகுதியில் தனிமை

நானும் அவரும் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு செல்வோம். அங்கு இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருப்போம். அதை எனக்குத் தெரியாமல் சகாபுதீன் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோக்களை எனக்கு அனுப்பி ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த வீடியோக்களை பதிவு செய்து விடுவதாகக் கூறுகின்றனர். அப்படியொரு நிலை ஏற்பட்டால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில் என்று கண்ணீருடன் கூறினார்.

உடனே சகாபுதீன் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய கும்பலின் செல்போன் நம்பர்களையும் ஆன்லைன் மூலம் புகாரை பெற்ற எஸ்.பி வருண்குமார், சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் யார் அவர்கள் என விசாரணையை தொடங்கினார். அப்போது அந்தப் பெண் கூறிய ரீசார்ஜ் கடைக்கு போலீஸார் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கம்ப்யூட்டர்களிலும் சகாபுதீனின் செல்போன்களிலிருந்த ஆபாச வீடியோக்களைப் பார்த்து போலீஸாரை அதிர்ச்சிக்குள் உறைந்தனர். அதுதொடர்பாக சகாபுதீனிடம் விசாரித்தபோது அவரின் சுயரூபம் வெளியில் தெரியவந்தது.

ரீசார்ஜ் காதல்

ராமநாதபுரம் கீழக்கரை மகளிர் போலீஸார் கூறுகையில், ‘சகாபுதீன் என்கிற ஷேக் சகாபுதீன் வேலைப்பார்க்கும் கடையை நடத்திவருபவர் செய்யது அபுபக்கர் பாதுஷா. ரீசார்ஜ் செய்ய வரும் பெண்கள் முதல் ஜெராக்ஸ், அரசு உதவி தொகை விண்ணப்பங்களை வாங்க வருபவர்களிடம் சகாபுதீன் அன்பாக பேசுவார். பின்னர் அவர்களுடன் நட்பாக பழகுவார். அப்போது அந்தப் பெண்களின் குடும்ப சூழலை தெரிந்துகொள்ளும் சகாபுதீன், அதன்பிறகே அவரின் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார்.

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

நீங்கள் எதற்கு கடை வருகிறீர்கள். உங்களின் செல்போனில் any desk என்ற செயலியை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் செயலி உங்களுக்கு ரொம்பவே யூஸ்புல்லாக இருக்கும் என்று தூண்டிலை வீசுவார். அவரின் பேச்சை நம்பி any desk செயலியை டவுன்லோடு செய்தவர்களின் அந்ததரங்க விஷயங்களை சகாபுதீன் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி திருடிவந்துள்ளார். ஆடியோக்களையும் ஓட்டுக்கேட்பார். இது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அவர்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் முதல் ஆடியோக்களை வரை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி அதிர்ச்சியை கொடுப்பார் சகாபுதீன்.

பணம் பறிக்க உதயமான கூட்டணி

அதன்பிறகு அவர் ஆட்டிவைக்கும் பொம்மைகளாவும் தூண்டிலில் சிக்கிய எலியைப் போல சகாபுதீனிடம் சிக்கி பணத்தை இழந்த பெண்களின் பட்டியல் 100-ஐ தாண்டுகிறது. பெண்களிடம் சந்தோஷமாக இருக்க சகாபுதீன், தான்வேலைப்பார்த்த கடையிலும் திருடியுள்ளார். அதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பாதுஷாவுக்கும் சகாபுதீனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் சகாபுதீன், தன்னிடமுள்ள இந்த பெண்களின் ஆபாச வீடியோக்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி சகாபுதீன், கடையின் உரிமையாளர் பாதுஷா மற்றும் இவர்களின் வெளிநாட்டில் வசித்துவரும் சையத் அலிம் கவுல் ஆகியோர் சேர்ந்து வீடியோவில் இருக்கும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

உள்ளூர் செல்போன் நம்பரிலிருந்து ஆபாச வீடியோக்களை அனுப்பினால் சிக்கிக் கொள்வோம் என முன்எச்சரிக்கையாக வெளிநாட்டிலிருக்கும் சையத் அலிம் கவுல் தரப்பிலிருந்தே வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சகாபுதீன், பாதுஷா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்துள்ளோம். கடையிலிருந்து 4 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அவைகளை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்

இன்ஸ்ட்ராகிராம்

இந்தச் சம்பவத்துக்கு முன், கீழக்கரையை சேர்ந்த முகமதுமைதீன் என்பவர் ஜெர்மனி நாட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் பல பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி அதன்மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் வசதியான பெண்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனின் நண்பர்களான சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோரும் பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி

அந்தப்பணத்தில் சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துவந்துள்ளனர். இந்தக் கும்பலிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளனர். நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி மற்றவர்களைத் தேடிவருகிறோம். ஜெர்மனியில் தங்கியிருக்கும் முகமது மைதீன்கானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். பெண்களை ஏமாற்றும் கும்பல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் 9489919722 என்ற நம்பருக்கு புகாரளிக்கலாம்” என்றனர்.

செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி
கனி
செல்போன்களை உளவுபார்க்கும் செயலிகள் – ராமநாதபுரம் பெண்களின் ஆபாச வீடியோக்களைத் திருடிய `any desk’ செயலி
பைசல்

ஆப்பு வைக்கும் ஆப்ஸ்கள்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘ஊரடங்கு நேரம் என்பதால் பெண்கள் முதல் அனைவரும் சமூகவலைதளங்களிலேயே தங்களின் நேரத்தை செலவழித்துவருகின்றனர். சீனா நாட்டின் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டிக்டாக்கில் வீடியோக்களை பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. அதனால் மீண்டும் முகநூல், இன்ஸ்ட்ராகிராம் பக்கம் அதிகம் பேர் திரும்பியுள்ளனர். குடும்ப புகைப்படங்கள், தனிப்பட்ட படங்களை பதிவு செய்யும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்தப் புகைப்படங்களை மார்பிங் செய்யும் கும்பல், அதை வைத்தே மிரட்டி பல பெண்களை ஏமாற்றியுள்ளனர். குடும்ப கௌரவம், அவமானம் எனக்கருதி பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் சொல்வதில்லை. ஒரு சில பெண்கள் தைரியமாக புகார் அளிப்பதால்தான் மிரட்டல் கும்பல்களின் சுயரூபங்கள் வெளியில் தெரிந்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.


ஸ்மார்ட் செல்போன்களில் செயலிகளை டவுன்லோடு செய்வதற்கு முன் கவனம் தேவை. ஏனெனில் பெரும்பாலான செயலிகள் உங்களை ரகசியமாக வேவு பார்க்கும். செயலியை டவுன்லோடு செய்தபிறகு அதை ஓப்பன் பண்ணும் போது சில மெசேஜ்கள் வரும். அது என்னவென்றே தெரியாமல் நாமும் ஓகே என்று பதிலளிப்போம். அந்தச் சம்மதம்தான் நம்மை வேவு பார்க்க அனுமதி கொடுக்கப்படுகிறது. அதனால் செல்போனில் உள்ள அனைத்து தரவுகளும் மோசடி கும்பலுக்கு செயலி மூலம் சென்றுவிடும். வங்கி கணக்கு விவரங்கள் இருந்தால் பணத்தை இழப்பீர்கள். தனிப்பட்ட புகைப்படங்கள் இருந்தால் அவமானங்களைச் சந்திப்பீர்கள். ஊரடங்கு காலக்கட்டத்தில் 200 மடங்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன” என்றார்

any desk செயலி குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு `AnyDesk செயலி என்பது ஒரு The Fast Remote Desktop Application. அதன்மூலம் மற்றவர்களின் தரவுகளை திருட வாய்ப்புள்ளது. இதுபோல ஆயிரக்கணக்காக செயலிகள் உள்ளன’ என்றனர்.

எனவே இன்றையக் காலக்கட்டத்தில் இளம்பெண்கள் முதல் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.

-எஸ்.செல்வம்