கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழக முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  தமிழக முதல்வர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  தமிழக முதல்வர் எச்சரிக்கை!

மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  தமிழக முதல்வர் எச்சரிக்கை!

அதன்படி  தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் லேசான அறிகுறிகளுடன் A1 , A2 பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கலாம் என்றும் லேசான அறிகுறிகளுடன் A3 , A4 பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் “கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் – Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.