ராம்நாடு அமமுகவை இரண்டாக பிரித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட டிடிவி தினகரன்!

 

ராம்நாடு அமமுகவை இரண்டாக பிரித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட டிடிவி தினகரன்!

ராமநாதபுரம் மாவட்டத்தை கட்சி அமைப்பு ரீதியாக இரண்டாகப் பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமமுக ராமநாதபுரம் மாவட்டக் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

ராம்நாடு அமமுகவை இரண்டாக பிரித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட டிடிவி தினகரன்!

இதில், ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதிகளும், ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடம்பெறும். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஜி.முனியசாமி (கட்சியின் அமைப்புச் செயலாளர்) நியமிக்கப்படுகிறார்.

ராம்நாடு அமமுகவை இரண்டாக பிரித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட டிடிவி தினகரன்!

அதேபோல ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளராக எம்.முருகன் (முன்னாள் எம்.எல்.ஏ.) நியமினம் செய்யப்படுகிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.