நெருங்கும் தேர்தல்: 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

 

நெருங்கும் தேர்தல்: 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

தேர்தலுக்காக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான குழு, சட்டமன்றத் தேர்தல் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவுடனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனும் ஆலோசனை நடத்தியது.

நெருங்கும் தேர்தல்: 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமித்து சத்ய பிரதா சாகு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதிகாரிகளின் பட்டியலும் உதவி அதிகாரிகளின் பட்டியலும் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 2 தலைமை இணை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் துறை இணை செயலாளராக இருந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ் மற்றும் சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஆகிய இருவரையும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்திருக்கிறது.