உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல் – புதிய சான்றிதழ் தேவையில்லை புதுச்சேரி அரசு அறிவிப்பு

 

உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல் – புதிய சான்றிதழ் தேவையில்லை புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது நேரிடும் சில சூழல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதுமே லாக்டெளன் அறிவிக்கப்பட்டு மக்களும் நிர்வனங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுவதே சவாலான காரியம். மேலும் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிடலாம் என்பதால் பல தேர்வுகள் கைவிடப்பட்டன.

உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல் – புதிய சான்றிதழ் தேவையில்லை புதுச்சேரி அரசு அறிவிப்பு

பத்தாம் வகுப்புத் தேர்வு கூட தேதி முதலில் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பு எழுந்ததும் தேர்வே ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை ஒட்டி, மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போதும் நேரில் கல்லூரிக்குச் செல்வது மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பல சான்றிதழ்களை இணைக்க வேண்டியிருக்கும். அவற்றிலிருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல் – புதிய சான்றிதழ் தேவையில்லை புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணபிக்கும் காலம் இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை உள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது குடியுரிமை சான்றிதழ், வருமான சான்றித, சாதி சான்றிதழ் உள்ளிட்டவை புதிதாக எடுக்கப்பட்டவை இணைக்க வேண்டும். ஆனால், இவற்றை அளிக்கும் வருவாய்த் துறை கொரோனா பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இது சாத்தியம் இல்லை.

புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் நாராயணசாமி,’ உயர்கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வருவாய்த் துறை மூலம் பெறப்படும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை புதிய சான்றிதழ் இணைக்க வேண்டியதில்லை. பழைய சான்றிதழையே இணைக்கலாம். ஒரு மாதத்திற்குப் பிறகு சூழல் இயல்பான பிறகு புதிய சான்றிதழைப் பெற்று சேர்த்துக்கொள்ளலாம்’ என்று அறிவித்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வரின் இந்த அறிவிப்பு விண்ணப்பிக்க விருக்கும் மாணவர்களுக்கு தெளிவைத் தந்ததோடு தேவையில்லாமல் அலைவதையும் தடுத்துள்ளது.