மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!

 

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டது. படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வரும் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிச.21 முதல் 26 வரை விண்ணப்பங்களை அளிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜன.6ல் இறுதி செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பாகக் கோரப்பட்ட டெண்டரை இரு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.