5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது!

 

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது!

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது!

பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமெஸ்டர்  தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில் இறுதியாண்டு  தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை தொடங்கி முடிந்துள்ளது.

அதன்படி  தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துது.

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது!

இந்நிலையில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இன்று ஆன்லைன் விண்ணப்ப
விநியோகம் தொடங்கியுள்ளது.  இந்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து www.tndalu.ac.in என்ற தளத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் .

ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும் என அதன் பதிவாளர் கூறியுள்ளார்.  மூன்றாண்டு சட்டப் படிப்பு, முதுகலை பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.