கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

முதுகலை படிப்புக்கு மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டிருந்த மாணவர் சேர்க்கை பணிகள் அண்மையில் தொடங்கியது. பெரும்பாலும் ஆன்லைன் விண்ணப்பங்களையே ஊக்குவிக்குமாறு அரசு அறிவுறுத்தி இருப்பதன் பேரில் விண்ணப்பம், கலந்தாய்வு, சான்றிதழ் பதிவேற்றம் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

நாளை முதல் 20ம் தேதி வரை www.tngasapg.in, www.tngasapg.org என்ற இணையத்தள முகவரியில் பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பதிவுக்கட்டணம் ரூ.2 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சேர்த்து ரூ.60 செலுத்த வேண்டும் என்றும் பட்டியலின விண்ணப்பத்தாரர்கள் பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்துள்ளார்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மேலும், மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்டோபர் 15ம் தேதி முதல் அக்டோபர் 20ம்ஆம் தேதி வரை அட்டவணைப்படி பதிவேற்றலாம் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.