”விரைவில் ஆண்டிராய்ட் டிவியில் ஆப்பிள் டிவி செயலி” – தொடக்ககட்டமாக சோனி டிவிக்களில் கிடைக்க ஏற்பாடு

”விரைவில் ஆண்டிராய்ட் டிவியில் ஆப்பிள் டிவி செயலி” – தொடக்ககட்டமாக சோனி டிவிக்களில் கிடைக்க ஏற்பாடு

விரைவில் ஆண்டிராய்ட் டிவிக்களில் ஆப்பிள் டிவி செயலியை பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

”விரைவில் ஆண்டிராய்ட் டிவியில் ஆப்பிள் டிவி செயலி” – தொடக்ககட்டமாக சோனி டிவிக்களில் கிடைக்க ஏற்பாடு

ஆப்பிள் டிவி செயலியை அந்நிறுவனத்தின், சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை தான் பல காலமாகவே நீடித்து வந்தது. கடந்த ஆண்டு அமேசான் பயர் டிவி ஸ்டிக்கில் ஆப்பிள் டிவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஆப்பிளின் போட்டி நிறுவனமாக கருதப்படும் ஆண்டிராய்ட்டின் டிவி இயங்குதளத்தில் ஆப்பிள் டிவி செயலியையை விரைவில் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

”விரைவில் ஆண்டிராய்ட் டிவியில் ஆப்பிள் டிவி செயலி” – தொடக்ககட்டமாக சோனி டிவிக்களில் கிடைக்க ஏற்பாடு

முதல்கட்டமாக சோனி நிறுவனத்தின் எக்ஸ்900 எச் தொடர் ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு மட்டும் இந்த அப்டேட் வழங்கப்பட்டு பின்னர் படிப்படியாக 2020, 2019 மற்றும் 2018 ஆண்டுகளில் விற்பனையான சோனி நிறுவனத்தின் மற்ற ஆண்டிராய்ட் டிவிக்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என தெரிகிறது. தொடக்க கட்டமாக அமெரிக்காவில் மட்டும் ஆண்டிராய்ட் டிவிக்களில் ஆப்பிள் டிவி செயலி செயல்படும் என்றும் பின்னர் உலகளவில் பல நாடுகளிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இதன் மூலம் ஆண்டிராய்ட் டிவி மற்றும் ஆண்டிராய்ட் டிவி சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், விரைவில் ஆப்பிள் டிவி செயலி பயன்படுத்தி அதில் உள்ள எண்ணற்ற திரைப்படங்கள் மற்றும் காணொளிகளை கண்டுகளிக்க முடியும்.

  • எஸ். முத்துக்குமார்