மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்துவதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 போன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்”இந்தியாவில் ஐபோன் 11 போன்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐபோன் 11 ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் முதல் முறையாக சிறந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்திருந்தார்.
கொரோனா பாதிப்பிலும் ஐபோன் விற்பனை குறைந்தபாடில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 11 மாடலில் ஏற்கனவே இருந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பதற்காக விலை குறைப்பு ஏதும் இதுவரை செய்யப்படவில்லை.
தற்போது ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 போன்கள் சென்னையிலுள்ள பாக்ஸ்கான் என்ற நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதே வேகத்தில் செயல்படும்போது இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அவர்களாகவே முன்வந்து தங்கள் ஸ்மார்ட்போன்களை இந்தியவில் தயாரிக்க முன் வருவார்கள் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாகி அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.