” ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக் சேஃப் டுயோ சார்ஜர்” – ஆப்பிள் அறிமுகம் !

” ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக் சேஃப் டுயோ சார்ஜர்” – ஆப்பிள் அறிமுகம் !

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய உதவிடும் மேக் சேஃப் டுயோ சார்ஜரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

” ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக் சேஃப் டுயோ சார்ஜர்” – ஆப்பிள் அறிமுகம் !

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12க்கு சார்ஜர் தனியாக தரப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. சுற்றுச்சூழலை காரணம் காட்டி ஐபோன் 12 பாக்ஸில் சார்ஜர் கொடுக்கப்படவில்லை என ஆப்பிள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு தனியாக சார்ஜர் ஒன்றை சியோமி நிறுவனம் கூட அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஐபோன் 12ஐ சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் மேக்சேஃப் டுயோ சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

” ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக் சேஃப் டுயோ சார்ஜர்” – ஆப்பிள் அறிமுகம் !

டுயோ என்ற பெயருக்கு ஏற்ற வகையில் இதில் ஒரே நேரத்தில் இரண்டு ஆப்பிள் சாதனங்களை சார்ஜ் செய்திட முடியும் என தெரிகிறது. அதாவது ஐபோன் 12 ஒருபுறமும், மற்றொரு புறம் ஆப்பிள் வாட்ச் அல்லது வேறொரு போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும் பயணங்களின் போது மடக்கிவைத்து எடுத்துச்செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

” ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக் சேஃப் டுயோ சார்ஜர்” – ஆப்பிள் அறிமுகம் !

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஆன்லைன் ஸ்டோரில் இந்த மேக்சேஃப் சார்ஜர் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இதன் விலை 13, 900 ரூபாய் என்றும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு இந்த சார்ஜர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த சார்ஜர் நல்ல ஒரு ஆப்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்