ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் வரும் 15 ஆம் தேதி அறிமுகம்!- விலையை கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க!

 

ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் வரும் 15 ஆம் தேதி அறிமுகம்!- விலையை கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றால் எப்பாடுபட்டாவது வாங்கிவிட வேண்டும் என நினைக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எவ்வளவு விலை என்றாலும் கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர். அந்த வகையில், தற்போது புதிதாக ஏர்பாட் மேக்ஸ் வெளியிட உள்ளது. இதன் விலையை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். இந்த புதிய ஏர்பாட் ஐந்து வண்ணங்களில் கிடைக்க உள்ளது. ஸ்பேஸ் கிரே, ஸ்கை புளூ, சில்வர், பிங்க் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் ஆப்பிள் வெளியிட உள்ளது. ஏர்பாட் சந்தையில் ஏற்கெனவே சோனி, போஷ் ஸ்பீக்கர், ஜாப்ரா, சென்ஹைஷர் நிறுவனங்கள் கோலோச்சி வரும் நிலையில், ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் அறிமுகமாகிறது. இந்த நிறுவனங்களுக்கு ஆப்பிள் கடும்போட்டி அளிக்கும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் வரும் 15 ஆம் தேதி அறிமுகம்!- விலையை கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க!

ஏற்கெனவே , வாடிக்கையாளர்களிடம் பெயர்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமானதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் மேக்ஸ் எப்படி இருக்கும் என தெரியாது என கூறப்படுகிறது. எனினும் ஆப்பிள் நிறுவன தயாரிப்பு என்றால் தரமானதாக இருக்கும் என்று நம்பிக்கையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு நம்பிக்கையோடு ஆப்பிள் வெளியிடும் இந்த ஏர்பாட் மேக்ஸ் எவ்வளவு விலை இருக்கும் என்கிறீர்களா ? சுமார் 59 ஆயிரத்து 900 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆர்டர்கள் தற்போதே குவிந்துள்ளதாம். வரும் 15 ஆம் தேதி ஏர்பாட் ப்ரோ வெளியாக உள்ளது. ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் விலையே சுமார் 60 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில், அதற்கான சார்ஜர் உள்ளிட்டவை விலையும் விலையும் அதிகமாகவே உள்ளது.

ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் வரும் 15 ஆம் தேதி அறிமுகம்!- விலையை கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க!

யுஎஸ்பி கேபிள் விலை 1,900 ரூபாய், ஆடியோ கேபிள் 3,500 ரூபாய் இது தவிர 2 ஆண்டுகளுக்கான தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றுக்காக 6 ஆயிரத்து 900 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்பாட் மேக்ஸ், ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் சமீபத்திய ஐபோன்களில் பயன்படுத்த முடியும். (ஐபாட் ஏர் 3 மற்றும் 4 ) ஐபாட் சமீபத்திய இயங்குதளம் மற்றும் ஆப்பிள் டிவியில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் ஆப்பிள் ஏர்பாட் மேக்ஸ் இயங்கும் என்றாலும், அதன் முழுமையான வசதிகளை அனுபவிக்க முடியாதாம். ஆப்பிள் போன்களுடன் வைபை மூலமும் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வைபை இணைப்பு வசதி கிடைக்காது என கூறப்படுகிறது. ஏர்பாட் மேக்ஸ் வாங்குவதற்காகவே ஆப்பிள் போன் வாங்கும் ரசிகர்கள் இருக்கும்போது, விலையைப் பற்றி கவலைப்படுவார்களா என்ன ?