கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

 

கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து சாதி, மத, இன- மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக கருப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சமூகவலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரவுவதை தடுக்க அரசு விதிமுறைகளை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.