வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

பொது சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக, வன்னியர் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர், ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

இதை தொடர்ந்து சென்னையில் நேற்று இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளும் சுமார் 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

இந்நிலையில் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக புகார் எழுந்த நிலையில் வன்னியர் சங்கத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி மீது வழக்குப்பதிய கோரியும் வராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளார். முறையீட்டை மனுவை தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதே பதிவுத்துறை முடிவெடுக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.